Welcome to the official blog of shanker dhillon A.K.A Dj Shanker...Kindly log on to our online radio to at WWW.TAMIZCLUB.NET...Thank You

Monday, May 2, 2011


தமிழீழ விடுதலைப் புலிகளை உலகத்திலேயே ஒழுக்கமான சுதந்திரப் போராளிகள் அமைப்பு என்று தெரிவித்துள்ள ஐ.நா நிபுணர்க் குழுவின் அறிக்கையை தாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போது நிபுணர்க்குழு அறிக்கை தொடர்பான இலங்கை அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விற்கு பதிலளிக்கையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐ.நா செயலாளரால் இலங்கை போர்க்குற்றம் தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர்க் குழுவின் அறிக்கையின் எட்டாம் பக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் சுதந்திரப் போராளிகள் என்றும் அவர்களின் போரளி அமைப்பு உலகிலேயே மிக ஒழுக்கமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.